அப்போது கடந்த வாரம் விருமன் படம் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐடி ரைடு நடப்பது வழக்கம் தான் என்று கூறிய கார்த்தி, இதன் பின்னணியில் எந்தவித அரசியல் நடவடிக்கைகளும் இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
கிராம நாயகனாக கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தை முத்தையா இயக்கியுள்ளார். இதில் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!