தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில், இந்த வாரம் 10 திரைப்படங்கள் வெளியாகின. அதில் அதர்வாவின் குறுதி ஆட்டம், துல்கர் சல்மானின் சீதா ராமம், வைபவ் நடித்த காட்டேரி போன்ற படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன.
குறிப்பாக அதர்வாவின் குறுதி ஆட்டம் திரைப்படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால் அப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இல்லாமல் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கு போட்டியாக வெளிவந்த சீதா ராமம் படம் தான் இந்த வாரம் வெளியான படங்களிலேயே பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
அதேபோல் தமிழ் நாட்டிலும் இப்படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. முதல் நாளில் தமிழ்நாட்டில் 20 லட்சம் மட்டுமே வசூலித்திருந்த இப்படம் இரண்டாம் நாளில் 80 லட்சத்திற்கும் மேல் வசூலித்து 4 மடங்கு அதிக வசூல் ஈட்டி உள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சீதா ராமம் படத்தை ஹனு ராகவபுடி இயக்கி உள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூரும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அஜய் தேவ்கனுடன் குஷ்பு..என்ன விஷயம் தெரியுமா?