குழந்தை பெற்ற பிறகும் குறையாத கிளாமர்... கடற்கரையில் விதவிதமான கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை விஜயலட்சுமி

First Published | Aug 7, 2022, 12:59 PM IST

Vijayalakshmi : அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவில் கடந்த ஆண்டு கலந்துகொண்ட விஜயலட்சுமி, அதில் டைட்டிலை வென்றதோடு 1 கோடி ரூபாய் பரிசையும் தட்டிச்சென்றார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான சென்னை 28 படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. அஜித்தின் காதல் கோட்டை படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் சென்னை 28 படத்தில் நடிகர் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், வனயுத்தம், கற்றது களவு, வெண்ணிலா வீடு, சென்னை 28 இரண்டாம் பாகம் என பல்வேறு படங்களில் நடித்த இவர், சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இயக்குனர் பெரோஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார் விஜயலட்சுமி.

இதையும் படியுங்கள்... நாடாளுமன்றத்தில் ராக்கெட்ரி... பாராட்டு மழையில் மாதவன்!

Tap to resize

இந்த தம்பதிக்கு நிலன் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது. நடிகை விஜயலட்சுமி கடந்த 2018 ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி 3-ம் இடம் பிடித்தார். இதையடுத்து அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவில் கடந்த ஆண்டு கலந்துகொண்ட அவர், அதில் இறுதி வரை சென்று டைட்டிலை வென்றதோடு 1 கோடி ரூபாய் பரிசையும் வென்றார்.

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் விஜயலட்சுமி, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடும் அவர், தற்போது கிளாமர் உடை அணிந்து கடற்கரையில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... போதைக்கு அடிமையான நடிகை... தம் அடிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்

Latest Videos

click me!