நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் இவர்கள், தற்போது விருமன் படத்தை தயாரித்து உள்ளனர். கார்த்தி நாயகனாக நடித்துள்ள இப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். ஏற்கனவே கொம்பன் படத்தில் இணைந்து பணியாற்றிய இந்த கூட்டணி தற்போது இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். விருமன் படத்தின் மூலம் நடிகை அதிதி ஷங்கர் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை அவர் யுவனுடன் சேர்ந்து பாடி உள்ளார். இப்பாடலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.