நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் சினிமாவிலும் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா, முதலாவதாக தனுஷ் நடித்த 3 படத்தை இயக்கினார்.
இதையடுத்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா, இப்படமும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இதனால் இப்படத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யா. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் தனது கணவர் தனுஷை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஐஸ்வர்யா.
விவாகரத்துக்கு பின்னர் பிட்னஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா. அந்தவகையில், இன்று காலை தனது ஆண் நண்பருடன் சைக்கிளிங் சென்ற ஐஸ்வர்யா, அதன்பின் போட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.