5 வருட டேட்டிங்கிற்கு பிறகு இந்த வருடம் ஏப்ரலில் நட்சத்திர ஜோடி திருமணம் செய்து கொண்டனர். கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் முக்கியஸ்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து சமீபத்தில் இந்த ஜோடி தங்களது குழந்தை குறித்த அறிவிப்பு வெளியிட்டனர்.
ஆலியா பட் தற்போது ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி, கல் இதயம் உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வரவேற்பு பெற்று வரும் ஆலியா பட் இவரது சோசியல் மீடியாவில் வெளியிடும் விளம்பரங்களுக்கு பெரும் கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...ஹாலிவுட் பிரபலத்தை களமிறக்கிய பொன்னியின் செல்வன்...வெளியான புதிய அப்டேட்