ஊரே மெச்சும் அளவுக்கு நிச்சயதார்த்தம் நடத்திவிட்டு... தாலி கட்டும் முன் திருமணத்தை நிறுத்திய சினிமா பிரபலங்கள்

Published : Jul 11, 2023, 01:44 PM IST

தடபுடலாக நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டு திருமணத்தை பாதியில் நிறுத்திய தமிழ் சினிமா பிரபலங்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
16
ஊரே மெச்சும் அளவுக்கு நிச்சயதார்த்தம் நடத்திவிட்டு... தாலி கட்டும் முன் திருமணத்தை நிறுத்திய சினிமா பிரபலங்கள்

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறி காதல் திருமணம் செய்துகொண்ட பிரபலங்கள் ஏராளமாக உள்ளனர். அஜித் - ஷாலினி தொடங்கி, சூர்யா - ஜோதிகா, சுந்தர் சி - குஷ்பு, ராதிகா - சரத்குமார், சினேகா - பிரசன்னா, கருணாஸ் - கிரேஸ், கவுதம் கார்த்திக் - மஞ்சிமா என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் இருக்க சில நடிகர், நடிகைகள் நிச்சயதார்த்தத்தை தடபுடலாக நடத்திவிட்டு திருமணத்தை பாதியிலேயே நிறுத்திய சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
திரிஷா - வருண் மணியன்

நடிகை திரிஷா 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு வருண் மணியன் என்பவருடன் திருமணம் நிச்சயம் ஆனது. இந்த காதல் ஜோடியின் திருமணம், நிச்சயதார்த்தத்துடன் நின்று போனது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிட்டனர். அதன்பின் 8 ஆண்டுகள் ஆகியும் நடிகை திரிஷா திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

36
விஷால் - அனிஷா ரெட்டி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், கடந்த 2019-ம் ஆண்டு அனிஷா அல்லா ரெட்டி என்கிற தெலுங்கு நடிகையை காதலித்து வந்தார். இந்த ஜோடிக்கு 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அதே ஆண்டு அக்டோபரில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதமே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால் இவர்களது திருமணம் பாதியிலேயே நின்று போனது.

இதையும் படியுங்கள்... சோழ, பாண்டிய வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது... தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட ராஜமவுலி நெகிழ்ச்சி

46
ராஷ்மிகா மந்தனா - ரக்‌ஷித் ஷெட்டி

கன்னட நடிகையான ராஷ்மிகா, குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டு தற்போது பான் இந்தியா நடிகையாக ஜொலித்து வருகிறார். இவர் தனது முதல் படமான கிரிக் பார்ட்டியில் நடித்தபோது கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி மீது காதல் வயப்பட்டார். இந்த ஜோடிக்கு 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது. பின்னர் சில மாதங்களிலேயே இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்ததால் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணம் நின்றுபோன பின்னர் தான் நடிகை ராஷ்மிகா டாப் நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

56
மெஹ்ரின் பிர்சாடா - பவ்யா பிஸ்னாய்

தனுஷின் பட்டாசு படத்தில் நாயகியாக நடித்து பிரபலமானவர் மெஹ்ரின் பிர்சாடா. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் ஆனது. இவர் ஹரியானாவை சேர்ந்த அரசியல்வாதியான பவ்யா பிஸ்னாய் என்பவரை காதலித்து கரம்பிடிக்க இருந்தார். இதனிடையே திருமணத்துக்கு முன்னரே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். 

66
ஆர்.கே.சுரேஷ் - திவ்யா கணேஷ்

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஆர்.கே.சுரேஷ். இவருக்கும் சீரியல் நடிகை திவ்யா கணேஷுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது. இதனை இவர்களே பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தனர். ஆனால் அதன்பின் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டு பிரிந்தனர். இதன்பின் ஆர்.கே.சுரேஷ் தமன்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திவ்யா கணேஷ் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.

இதையும் படியுங்கள்... Maaveeran Press Meet | மிஷ்கான் தான் மாவீரன் படத்துக்கு வில்லன்! - சிவகார்த்திகேயன் சொன்ன அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories