பனையூர் இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் விஜய் திடீர் மீட்டிங்... பின்னணி என்ன?

First Published | Jul 11, 2023, 11:57 AM IST

விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று திடீர் சந்திப்பு மேற்கொள்வதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

vijay

சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் விஜய், விரைவில் அரசியலில் நுழைய உள்ளார் என்பது தான் தற்போது தமிழகத்தில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. தனது அரசியல் எண்ட்ரி குறித்து விஜய் இதுவரை வாய்த்திறக்கவில்லை என்றாலும், அவரது நகர்வுகள் ஒவ்வொன்றும் அதனை ஆணித்தனமாக அறிவிக்கும் வகையில் உள்ளது. கடந்த மாதம் சென்னையில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி இருந்தார் நடிகர் விஜய். அதில் பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர் கவுரவித்து இருந்தார்.

vijay

விஜய் நடந்திய இந்த விழா, அவரின் அரசியல் பயணத்தின் ஆரம்பமாகவே கருதப்படுகிறது. ஏனெனில் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை அவர் தேர்ந்தெடுத்த விதம் தான். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இருந்து மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களை கவுரவப்படுத்தினார். விஜய்யின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தற்போது தனது மக்கள் இயக்கத்தை சேர்ந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று திடீர் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார் விஜய்.

இதையும் படியுங்கள்... லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு டிமிக்கி கொடுத்த ரவீந்தர்.. வழக்குப்பதிவு செய்து போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

Tap to resize

vijay

விஜய்யின் இந்த அதிரடி மீட்டிங் அவரின் அரசியல் பயணம் குறித்த ஆலோசனைக்கானது என்று ஒரு பக்கம் பேச்சு அடிபட்டாலும், மறுபக்கம் இது ஒரு சாதாரணமான சந்திப்பு என்றே கூறப்படுகிறது. கடந்த மாதம் நடந்த கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா 13 மணிநேரம் நடைபெற்றதால், தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய்யால் சந்திக்க முடியாமல் போனது.

அதனால் இன்று அவர்களை சந்தித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழாவை சிறப்பாக நடத்த உதவியதற்காக நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ள விஜய், அந்த 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொள்ள உள்ளாராம். இதில் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்பில்லை என்று தான் கூறப்படுகிறது. மேற்கண்ட தகவல்கள் இந்த மீட்டிங்கிற்கு பின்னர் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... மனோரமா வீட்டில் நடந்த திருட்டு... திருடனை விரட்டிப்பிடித்து வெளுத்துவிட்ட விஜயகாந்த் - ரியல் லைஃப் சம்பவம்

Latest Videos

click me!