vijayakanth
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். மதுரையில் இருந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த விஜயகாந்த், பின்னர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து தனக்கென ஒரு தனி ரூட்டை உருவாக்கினார். இதன் காரணமாகவே ரஜினி, கமலுக்கு இணையாக விஜயகாந்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
சினிமாவைப் போல் அரசியலிலும் களமிறங்கி அதகளப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் அதிலும் அதிரடி காட்டினார். சில ஆண்டுகள் மட்டுமே இவர் அரசியலில் ஆக்டிவாக இருந்தாலும், அவை காலம் கடந்து பேசும் அளவுக்கு சில தரமான சம்பவங்களையும் செய்தார் கேப்டன். இப்படி சினிமா, அரசியல் என இரண்டிலும் கலக்கிய கேப்டன் விஜயகாந்த், நிஜ வாழ்க்கையில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாறி திருடனை பிடித்த சம்பவம் குறித்து அவரின் நண்பரும், நடிகருமான தியாகு பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
அதன்படி, ஒரு நாள் நடிகை மனோரமாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசிவிட்டு நடந்துசெல்லும் போது, அவரது வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணிடம் இருந்து செயினை பறித்துக்கொண்டு ஒரு திருடன் ஓடினானாம். அதைப்பார்த்ததும் சட்டென ஆச்ஷன் மோடுக்கு மாறிய கேப்டன், அந்த திருடனை விரட்டிப் பிடித்து அவனை நடு ரோட்டிலேயே புரட்டி எடுத்து அவனிடம் இருந்து செயினை வாங்கி அந்த பெண்ணிடம் ஒப்படைத்தாராம். இப்படி எது தப்புனு தெரிந்தாலும் உடனே தட்டிக்கேட்பது தான் கேப்டனின் குணம் என தியாகு அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... சென்னை சூப்பர் கிங்ஸில் யோகிபாபுவுக்கு இடம் இருக்கு... ஆனா ஒரு கண்டிஷன் - தோனி கலகல பேச்சு