சென்னை சூப்பர் கிங்ஸில் யோகிபாபுவுக்கு இடம் இருக்கு... ஆனா ஒரு கண்டிஷன் - தோனி கலகல பேச்சு

First Published | Jul 11, 2023, 8:34 AM IST

சென்னையில் நடைபெற்ற எல்.ஜி.எம் பட விழாவில் கலந்துகொண்டு பேசிய தோனி, யோகிபாபுவை சிஎஸ்கே-வில் சேர்ப்பதற்காக நான் பேசுகிறேன் என கூறி உள்ளார்.

ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் லெட்ஸ் கெட் மேரீடு. ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரீஷுக்கு ஜோடியாக லவ் டுடே நாயகி இவானா நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை நதியா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். தமிழில் அவர் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும்.

லெட்ஸ் கெட் மேரீடு திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி கலந்துகொண்டு இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற கோர்ட் சூட் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக வந்திருந்த தோனி, தொகுப்பாளினி பாவனா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலும் அளித்தார்.

இதையும் படியுங்கள்... மாமியார் கூட பழகி பார்க்க ட்ரிப்! இவனாவின் ஒர்க் அவுட் ஆகாத ஐடியா.. தோனி தயாரிப்பில் வெளியானது 'LGM' ட்ரைலர்

Tap to resize

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் அவருக்கு பதிலாக யோகிபாபுவை அணியில் சேர்த்துக் கொள்வீர்களா என தோனியிடம் பாவனா கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து தோனி பேசியதாவது : “யோகிபாபுவுக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் இருக்கிறது என எனக்கு தெரியும். அவருக்காக சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் பேச நான் தயாராக இருக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன், யோகிபாபு மேட்ச் விளையாடவும், பயிற்சிக்கும் சரியாக கால்ஷீட் கொடுக்க வேண்டும். அதற்கு அவர் சம்மதித்தால் நான் அணி நிர்வாகத்திடம் பேச தயார்” என பதிலளித்தார்.

முன்னதாக நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் இருப்பதை அறிந்த தோனி அவருக்கு தன்னுடைய பேட் ஒன்றை கையெழுத்திட்டு அவருக்கு பரிசாக வழங்கி இருந்தார். தோனி கொடுத்த பரிசை எல்.ஜி.எம் படக்குழு அவரிடம் ஒப்படைத்தபோது இன்ப அதிர்ச்சி அடைந்த யோகிபாபு, அதுகுறித்த வீடியோவையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோ செம்ம வைரல் ஆனது.

இதையும் படியுங்கள்... மனைவியுடன் சென்னையில் தோனி.. சிறப்பாக வெளியிடப்பட்ட LGM பட ட்ரைலர் - கூர்க் ட்ரிப் போக ரெடியா?

Latest Videos

click me!