ஆர்.வி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகும் 'கடைசி தோட்டா' படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் அதிரடி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மேலும், ராதாரவி, ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மற்றும் வையாபுரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
மேலும், ராதாரவி மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார், அவரது வேடமும் பேசப்படும் விதத்தில் அமைந்திருக்கிறது. அதேபோல், நடிகர் வையாபுரி வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் காட்சிகளாக இருக்கும்.
அதற்க்கு முன்னதாக வனிதா விஜயகுமார் சுருட்டு பிடிக்கும் சில BTS புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள்... தம்மு, சுருட்டு எல்லாம் ரொம்ப பழக்கமானது போல் வனிதா மூக்கால் புகைவிட்டு கொண்டு பிடிக்கிறார், அப்போ அவருக்கு நிஜமாகவே இந்த கெட்ட பழக்கம் இருக்கா? என்கிற கேள்வியை எழுப்பி தாறுமாறாக கமெண்ட் போட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள். இந்த புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.