கோல்டன் கோட்... லெகின்ஸ் மீது சேலை கட்டி தாறுமாறாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்! ஹாட் போட்டோஸ்!

First Published | Jul 10, 2023, 9:51 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ்... கோல்டன் கோட் அணிந்து, தாறுமாறான ஃபேஷன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள்... தொடர்ந்து ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளதால் உச்ச கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் இவர் அடிக்கடி, வித்தியாசமான உடையில், எடுத்து வெளியிடும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தாறுமாறாக ரசிக்கப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில்... வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு, விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த 'ரஜினி முருகன்' சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தளபதி விஜய்யின் 'லியோ' படப்பிடிப்பு முடிவடைந்தது..! மாஸ் புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்..!

Tap to resize

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அம்மணியின் அழகும் மெருகேறியதால் விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். 

தமிழை தொடர்ந்து தெலுங்கிலும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்த படங்கள் வெற்றிபெறவே, இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட, 'மகாநடி' படத்தில் நடிக்கும் வாய்ப்பை  தட்டி தூக்கினார்.

கேப்டான் விஜயகாந்துக்காக மகனின் புது முயற்சி..! ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்..!

இப்படத்திற்காக கீர்த்தி போட்ட உழைப்பு வீண் ஆகவில்லை. ரீல் சாவித்ரியாக நடித்தாலும்.. இவரின் நடிப்பு ரியல் சாவித்ரியை நினைவூட்டியது. இந்த படமும் தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தியதோடு மட்டும் இன்றி, தொடர்ந்து கதையின் நாயகியாக நடிக்கும் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். ஆனால் கீர்த்தி சுரேஷின் துரதிஷ்டம் இவர் கதையின் நாயகியாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை.

ஜீவானந்தம் பெயரை கேட்டதுமே ஷாக்கான கெளதம்.! அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட்.. குணசேகரனுக்கு காத்திருக்கும் இடி!

ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கில் இவர் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, நானி மற்றும் தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த 'மாமன்னன்' படங்கள் வரிசையாக வெற்றி பெற்றதால்... உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளார். மேலும் அடிக்கடி, போட்டோ ஷூட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கீர்த்தி சுரேஷ்... தற்போது கோல்டன் கோட் அணிந்து மேலே சேலை உடுத்தி, தாறுமாறான ஸ்டைலிஷ் லுக்கில் கீர்த்தி இருப்பதாக ரசிகர்கள்,  லைக்குகள் போட்டு வருகிறார்கள்.

Latest Videos

click me!