நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன மாமன்னன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதுதவிர அரை டஜன் படங்கள் அவர் கைவசம் உள்ளன. இப்படி பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷை திரைத்துறையில் இருந்து ஓரங்கட்ட சிலர் முயன்றதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.