கோலிவுட் உலகின் சூப்பர் ஹிட் ஹீரோஸ்.. ஆனால் அந்த இடத்தை கோட்டைவிட்ட வாரிசு நடிகர்கள்!

அய்யா சிவாஜி கணேசன் துவங்கி, சியான் விக்ரம் வரை பலர் நடிகர்களின் வாரிசுகள் தமிழ் திரைத்துறையில் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் சிலர், தங்களின் தந்தை அளவிற்கு புகழ்பெற்றுள்ளார்களா? என்றால் அது சந்தேகமே!

கவுதம் கார்த்திக் 

மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர், இவருடைய தாத்தா முத்துராமனும் சரி தந்தை கார்த்திக்கும் சரி மிக மிக நேர்த்தியான நடிகர்கள். குறிப்பாக நவரச நாயகன் கார்த்தி தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வந்தவர். கவுதம் கார்த்திக்கும் நடிக்க துவங்கிய புதிதில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வந்தாலும், அண்மைக்காலமாக கதைகளை பெரிய அளவில் தேர்வு செய்யாமல் எண்ணிக்கைக்காக நடித்து வருகின்றார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சோழ, பாண்டிய வரலாறு மெய்சிலிர்க்க வைத்தது... தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட ராஜமவுலி நெகிழ்ச்சி

விக்ரம் பிரபு 

இவரும் மிகப்பெரிய நடிப்பு குடும்பத்தில் இருந்து வந்தவர். தாத்தாவும், தந்தையும் பெற்ற புகழில் இன்னும் கால்வாசி அளவை கூட இவர் தொடவில்லை என்று தான் கூறவேண்டும். 2012ம் ஆண்டு கும்கி படம் துவங்கி இன்று "பாயும் ஒளி நீ எனக்கு" வரை பல நல்ல திரைப்படங்களை கொடுத்திருந்தாலும், தந்தை பிரபு அளவிற்கு ஒரு நேர்த்தியான நடிப்பு கொஞ்சம் இவரிடம் மிஸ்ஸாகிறது என்று தான் கூறவேண்டும்.


அதர்வா முரளி 

தமிழ் திரையுலகில் முரளி விட்டுச்சென்ற வெற்றிடம் அப்படியே இருக்கின்றது என்றால் அது மிகையல்ல. கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் என்ற இரு ஆளுமைகள் இருந்த காலத்திலேயே சிறப்பாக வளர்ந்த ஒரு நடிகர். ஆனால் அதர்வா, பரதேசி படத்தோடு தனது நடிப்பு திறமைகளை சற்றுகுறைத்துக்கொண்டாரோ? என்று தான் தோன்றுகிறது. தற்போது நிறைய படங்கள் நடித்து வந்தாலும், தந்தையின் இடத்தை பிடிப்பாரா? என்பது சந்தேகமே!

சிபி சத்யராஜ் 

மகா நடிகனின் மகன் இவர், இன்றளவும் சிபியை ஒப்பிடும்போது சத்யராஜ் அதிக அளவில் படங்களை நடித்து வருகின்றார் என்று தான் கூறவேண்டும். சிபிராஜுக்கு நல்ல திறமை இருந்தபோதும் கதை தேர்வில் சற்று சறுக்கிவிடுகிறார் என்பது தான் நிதர்சமான உண்மை. தொடர்ச்சியாக இவரும் நல்ல பல படங்களை கொடுத்தாலும் தந்தை அளவிற்கு வளர இன்னும் அதிக பயிற்சி வேண்டும்.

Latest Videos

click me!