ஆசையை தூண்டிவிட்ட அஜித்.. துணிவுடன் பைக் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய மஞ்சு வாரியர்- அப்போ இனி அடிக்கடி பைக்ரைடு தான்

Published : Jan 18, 2023, 11:24 AM IST

நடிகை மஞ்சு வாரியர், எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவகத்திற்கு நேரில் வந்து, அதிகாரிகள் முன்னிலையில் பைக் ஓட்டி காட்டி அதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்றிருக்கிறார். 

PREV
14
ஆசையை தூண்டிவிட்ட அஜித்.. துணிவுடன் பைக் ஓட்டி லைசன்ஸ் வாங்கிய மஞ்சு வாரியர்- அப்போ இனி அடிக்கடி பைக்ரைடு தான்

மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கிய அப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இதையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த மஞ்சு வாரியர், அஜித்தின் துணிவு படம் மூலம் தமிழில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

24

எச்.வினோத் இயக்கிய துணிவு படத்தில் அஜித்தின் டீம் மேட்டாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இப்படத்தில் அவர் சண்டைக் காட்சியிலும் துணிச்சலாக நடித்து ஆக்‌ஷன் ஹீரோயினாக அதகளப்படுத்தி இருந்தார். துணிவு படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் உள்ள மஞ்சு வாரியர், தற்போது டூவீலர் லைசன்ஸ் வாங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... யார் அந்த மாமாகுட்டி?... லைவ் வீடியோவில் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்த நபர் - ஷாக் ஆன ரசிகர்கள்

34

எர்ணாகுளத்தில் உள்ள காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவகத்திற்கு நேரில் வந்து, அதிகாரிகள் முன்னிலையில் பைக் ஓட்டி காட்டி அதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்றிருக்கிறார் மஞ்சுவாரியர். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

44

முன்னதாக துணிவு பட ஷூட்டிங் சமயத்தில் நடிகை மஞ்சு வாரியர் அஜித்துடன் சேர்ந்து லடாக் பகுதியில் பைக் டிரிப் மேற்கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் பைக் ரைடிங்கின் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தற்போது லைசன்ஸ் வாங்கி உள்ளாராம். இனிமேல் அஜித்தைப் போல் மஞ்சு வாரியரும் அடிக்கடி பைக்கில் சுற்றும் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசு vs துணிவு.... பொங்கல் விடுமுறை முடிவில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்தது யார்? - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Read more Photos on
click me!

Recommended Stories