விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அவர் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. மாஸ்டர் படத்துக்கு பின் விஜய்யும், லோகேஷும் இணைந்து பணியாற்றும் படம் இது என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது.
அதன்படி தளபதி 67 படத்தில் நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவரும் தேர்வாகி உள்ளாராம். தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர் ஜனனி. இலங்கையை சேர்ந்தவரான இவர், கடந்த சில வாரங்களுக்கு முன் எலிமினேட் ஆகிவிட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தான் அவருக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம் தான். ஆனால் வெளியேறிய உடன் விஜய் போன்ற முன்னணி நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை ஜனனி கைப்பற்றி உள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இருப்பினும் அவர் என்ன கேரக்டரில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார் புஷ்பா பட நடிகர்… ரசிகர்கள் உற்சாகம்!!