பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி உள்ள 'வாரிசு' திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் உலக அளவில் 150 கோடி வசூல் செய்துள்ள நிலையில், மேலும் அதிக வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 11ஆம் தேதி தமிழில் வெளியான வாரிசு திரைப்படம், ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. தமிழ் ரசிகர்களை போல, தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தை தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். மேலும் முதல் நாளே இந்த படத்தின் வெற்றியை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பட்டாசு மற்றும் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ படு வைரலானது.
நடிகை குஷ்பூ 'வாரிசு' படத்தில் மிகவும் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருந்ததாக கூறப்பட்டது. மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் மற்றும் ராஷ்மிகாவுடன் குஷ்பூ 'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியானது. அது மட்டும் இன்றி 'வாரிசு' படத்தின் ஆடியோ லாஞ்சில் இதனை குஷ்புவும் உறுதி செய்தார்.
துணிவு படத்திற்கு வசூலில் செம்ம டஃப் கொடுத்து வரும் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.