1. இப்படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் இப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்த விக்கி, அவரை அணுகி கதை கூறியபோது... திரைக்கதையால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், இப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக உருவாக்கப்பட்டுள்ளதால் இப்படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.