கேங்ஸ்டர் கம்மிங்: முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகும் தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?

Published : Jan 17, 2023, 12:52 PM IST

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி67 படம் முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

PREV
120
கேங்ஸ்டர் கம்மிங்: முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக உருவாகும் தளபதி67ல் யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா?
வாரிசு

விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவான வாரிசு படம் கடந்த 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. என்னதான குறைவான படங்களில் வெளியாகியிருந்தாலும், அஜித்தின் துணிவு படத்திற்கு இணையாக அதிக வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது.

220
வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வெறும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.63 கோடி வரையிலும், உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாகவே வசூல் குவித்துள்ளது.

320
தில் ராஜூ

வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ இந்தப் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறார். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது.

420
ரஞ்சிதமே பாடல்

விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தி வெளியாகி இருந்த நிலையில், இந்தப் படம் குடும்பக் கதையை மையப்படுத்தி வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அதிலேயும் குறிப்பாக இந்த ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்குகள் அதிரும் வகையில் ரசிகர்கள் ஆரவாரம் செய்ததோடு, திரையரங்குகளிலும் குத்தாட்டம் போட்டனர்.

சிறுசு முதல் பெருசு வரை ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம்: திரையரங்கையே அதிரவிட்ட பாட்டி: வைரலாகும் வீடியோ!

520
ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

துணிவு திரைப்படத்தின் தமிழகத்தின் ஒட்டு மொத்த வெளியீட்டு உரிமையையும், 'வாரிசு' திரைப்படத்தை தமிழகத்தில் சில பகுதிகளிலும் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம், பொங்கல் வின்னர் யார் என்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பகவதி ஸ்டைலில் உருவாகும் தளபதி67: டீக்கடை ஓனராக நடிக்கும் விஜய்?

620
வாரிசு வெற்றிப்படம்

அதில் அஜித்தின் 'துணிவு' மற்றும் விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு படங்களுமே வெற்றிப் படங்கள் தான் என நடுத்தரமாக தன்னுடைய பதிவை பதிவிட்டுள்ளது. இது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

720
தளபதி67

இந்த நிலையில் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படமான தளபதி67 படத்தில் விஜய் 46வயது நிரம்பிய டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

820
பகவதி

அதுமட்டுமின்றி பகவதி படத்தில் விஜய் டீக்கடை நடத்தி வரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தனது தம்பியை கொலை செய்ய, தான் ஒரு டானாக அவதாரம் எடுத்தார்.

920
தளபதி67 பூஜை

அதே போன்று தான் தளபதி67 படமும் சின்ன சின்ன மாற்றத்தோடு உருவாவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி67 படத்தின் அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். 

1020
தளபதி67 நடிகர், நடிகைகள்:

இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், அர்ஜூன் தாஸ், மன்சூர் அலி கான், நிவின் பாலி, ரக்‌ஷித் ஷெட்டி ஆகியோர் பலர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

1120
த்ரிஷா

கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி67 படத்தில் விஜய்ய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய் வீட்டிற்கு அருகில் ரூ.35 கோடியில் நடிகை த்ரிஷா புதிதாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார். இதற்கு முன்னதாக அஜித் வீட்டிற்கு அருகில் ரூ.5 கோடியில் புதிய பிளாட் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1220
ஆக்‌ஷன் கிங் அர்ஜூன்

முதல் முறையாக விஜய் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் இணைந்து இந்தப் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
 

1320
மிஷ்கின்

யூத் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பணியாற்றுகிறேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அப்போது எப்படி அண்ணா என்று அழைத்தாரோ அதே போன்று தான் இப்போதும் அழைக்கிறார். இந்த உடம்பை வைத்தே அவருடன் சண்டைக் காட்சியில் நடித்திருக்கிறேன். வாய் எல்லாவற்றையும் அடித்து உடைத்துவிட்டார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் எந்தவித பதற்றமும் இல்லாமல் படத்தை தெளிவாக இயக்குகிறார். ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக எடுத்துக் கொடுக்கிறார் என்று ஒரு நிகழ்ச்சியில் தளபதி67 படம் குறித்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1420
கௌதம் மேனன்:

விஜய் மற்றும் கௌதம் மேனன் இருவரும் இணைவது முதல் முறை. இதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய், யோகன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது இருவரும் தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், கௌதம் மேனன் ஏஜென்டாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

1520
அர்ஜூன் தாஸ்:

மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் அர்ஜூன் தாஸ் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் ஒரு ரௌடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தற்போது தளபதி67 படத்தில் ஒரு ரா ஏஜென்டாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

1620
மன்சூர் அலி கான்:

மின்சார கண்ணா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன், தேவா மற்றும் வசந்த வாசல் ஆகிய படங்களைத் தொடர்ந்து மன்சூர் அலி கான் மற்றும் விஜய் இருவரும் இணைந்து தளபதி67 படத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மன்சூர் அலி கான் ரா ஏஜென்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
 

1720
நிவின் பாலி:

விஜய் மற்றும் நிவின் பாலி இருவரும் இணைந்து தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

1820
சஞ்சய் தத்:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும், சஞ்சய் தத் ரா ஏஜென்டாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

1920
ரக்‌ஷித் ஷெட்டி:

கன்னட சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும், இயக்குநரானகவும் விளங்கும் ரக்‌ஷித் ஷெட்டி தளபதி67 படத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

2020
7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக இந்தப் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories