150 கோடி வசூல் கிளப்பில் துணிவு..! பொங்கல் ரேஸில் ரியல் வின்னர் விஜய்யா? அஜித்தா? வெளியான தகவல்!

First Published | Jan 17, 2023, 11:09 AM IST

துணிவு திரைப்படம் உலக அளவில் 150 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள நிலையில், பொங்கல் வின்னர் யார்? என்கிற விவாதம் விஜய் - அஜித் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அஜித் நடித்த 'துணிவு' மற்றும் 'விஜய்யின்' வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. அஜித் 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை, தொடர்ந்து மீண்டும் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'துணிவு' படத்தில் இணைந்தார். இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவான இப்படம், வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் கூறப்பட்டுள்ள சமூக கருத்தும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Tap to resize

துணிவு படத்திற்கு போட்டியாக வெளியான வாரிசு படமும் இதுவரை உலக அளவில் 100 கோடி வசூலை குவித்துள்ள நிலையில், 'துணிவு' படத்தின் வசூலில் இருந்து சற்று பின்தங்கிய உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இரு படங்களுக்கும் ஒரே விதமான வரவேற்பு கிடைத்த போதிலும், வட அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், துபாய், மலேசியா போன்ற நாடுகளில் அஜித்தின் துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால்,  வாரிசு படத்தின் வசூலை துணிவு திரைப்படம் முந்தி உள்ளதாக கூறப்படுகிறது.

'துணிவு' திரைப்படம் வெளியானதில் இருந்து, வசூலில் முன்னணியில் இருக்கும் நிலையில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆபீஸில், பொங்கல்  வின்னர் யார் என்கிற விவாதம் ஒரு புறம் எழுந்துள்ளது.

எனினும் இரண்டு படங்களுமே வித்தியாசமான ஜர்னரில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்... இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றதாகவே தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும், வர்த்தக நிபுணர்களும் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில் வாரிசு படத்திற்கு முன்பாகவே துணிவு திரைப்படம் 150 கோடி வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!