'வாரிசு' பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் உள்ளாரா விஜய்? சொன்னபடி நடந்து கொள்ளாதது தான் காரணமா..!

First Published | Jan 17, 2023, 9:11 AM IST

தளபதி விஜய், வாரிசு படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தளபதி விஜய் தெலுங்கு திரையுலக இயக்குனர் வம்சி இயக்கத்தில், முதல் முறையாக நடித்த 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி ஆறு நாட்கள் ஆகும் நிலையில் ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதே நேரம் குடும்பத்தோடு ரசிக்க வேண்டிய சிறந்த படம் என்று பெண்கள் மத்தியில் பாராட்டப்பட்டு வந்தாலும், இளம் ரசிகர்கள் சற்று ஓவராக சென்டிமென்ட் காட்சிகள் தளபதிக்கு செட் ஆகவில்லை என தெரிவித்து வருகிறார்கள்.

ஹாலிவுட் நாயகிகளையே மிஞ்சிய தமன்னா! எல்லை தாண்டிய டீப் நெக் கிளாமரில்... கவர்ச்சி விருந்து வைத்த போட்டோஸ்!

Tap to resize

வசூலை பொறுத்த வரை, உலக அளவில் 100 கோடியை கடந்துள்ள 'வாரிசு' திரைப்படம், தமிழகத்தில் மட்டும் 70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் போட்டியாக அஜித்தின் 'துணிவு' திரைப்படமும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு மீது தளபதி விஜய் கோபத்தில் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் தெலுங்கு படத்தின் ரிலீஸ் என கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலுமே, 'வாரிசு' திரைப்படத்தை ஜனவரி 11-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

சபரிமலைக்கு சென்று வந்த கையேடு... நயன்தாரா தோளில் சாய்ந்து கொண்டு இரட்டை குழந்தையோடு போஸ் கொடுத்த விக்கி!

ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகிய இரு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் தியேட்டர் கிடைக்காத காரணத்தால் 'வாரிசு' படத்தின் ரிலீஸ் தேதியை ஜனவரி 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததாக இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அறிவித்தார்.

சொன்னபடி தில் ராஜு நடந்து கொள்ளாமல் தெலுங்கில் 'வாரிசு' படத்தின் ரிலீஸ் தாமதமாக வெளியிட்டதால் அவர் மீது விஜய் அதிருப்தியில் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.எனினும் தெலுங்கில் 'வாரிசு' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளே கேக் வெட்டி பட்டாசு வெடித்து தயாரிப்பாளர்கள் ராஜூ மற்றும் இயக்குனர் வம்சி ஆகியோர் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியே என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே... 'தமிழ்நாடு' என பெயர் வந்த கதையை டிடியிடன் கூறிய விக்ரமன்! வீடியோ...

Latest Videos

click me!