லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை, கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொண்ட விக்னேஷ் சிவனுக்கு, நயன்தாரா அவர் வாழ்க்கையில் வந்ததில் இருந்தே அதிர்ஷ்ட காத்து வீச துவங்கி விட்டது என்று கூறலாம்.
மேலும் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்னர், நடிகர் ஜெயம் ரவி, ஜெயராம், ஆகியோருடன் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியது.
நயன்தாரா மிகவும் மங்களகரமாக வகுடில் குங்குமம், தலையில் பூ வைத்து சல்வார் அழகில் ஜொலிக்கிறார். மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகள், இருவரின் மடியில் அழகாக படுத்துள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே பலர் தாறுமாறாக தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.