விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தின் மூலம், ஹீரோயினாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய மலையாள நடிகையான மாளவிகா மோஹனன், தற்போது தமிழில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் 'தங்கலான்' படத்தில், விக்ரமுடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பொதுவாக சமூக வலைதளத்தில் தன்னுடைய அதிரி புதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன், தற்போது பொங்கல் ஸ்பெஷலாக கலர்ஃபுல்லான பாவாடை தாவணி அழகில், பளிச்சென வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஹோமிலி லுக்கில்... வடு எடுத்து தலை சீவி, நெற்றியில் பொட்டு வைத்து, கம்மல் ஜிமிக்கி, கை நிறைய வளையல், மற்றும் பாவாடை தாவணிக்கு ஏற்ற போல் நகைகள் அணிந்து கூடவே தன்னுடைய புன்னகை அழகில் ஜொலிக்கிறார் மாளவிகா மோகனன். அதே போல் தன்னுடைய சமூக வலைதளத்தில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என தமிழிலும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவுகளுடன் பாறைக்கு நடுவே அமர்ந்து இவர் எடுத்துக் கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களும் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
'வாரிசு' பட தயாரிப்பாளர் மீது கோபத்தில் உள்ளாரா விஜய்? சொன்னபடி நடந்து கொள்ளாதது தான் காரணமா..!