காணும் பொங்கல் தினமான நேற்று அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் உலகளவில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. இதன்மூலம் கடந்த 7 நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ.175 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக அஜித் படங்களுக்கு வெளிநாட்டில் பெரிதாக வரவேற்பு இருக்காது என்பதை துணிவு படம் தகர்த்தெறிந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் என பல்வேறு நாடுகளில் அஜித்தின் கெரியரில் அதிக கலெக்ஷனை குவித்த படமாக துணிவு மாறி உள்ளது.