அஜித் நடிப்பில் ஜனவரி 11ஆம் தேதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'துணிவு'. ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், இரண்டு வாரங்களைக் கடந்தும், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று, இந்தியாவில் மட்டும் இன்றி வெளியிடங்களிலும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் சுமார் 250 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள துணிவு திரைப்படம், இன்னும் சில தினங்களில் 300 கோடி வசூலை எட்ட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. துணிவு படத்தின் வெற்றி அஜித் மற்றும் இயக்குனர் ஹெச் வினோத், ஆகியோரை, உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இருவருமே தங்களின் அடுத்த படத்திற்கு தயாராகி உள்ளனர்.
தனுஷ் - செல்வராகவன் மோதல்.... ஆரம்பமே இப்படியா? எகிறும் எதிர்பார்ப்பு!
அதன்படி ஏற்கனவே வெளியான தகவலில், இயக்குனர் எச்.வினோத் கமல்ஹாசனை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் திடீர் என விக்னேஷ் சிவன், AK 62 ஆவது படத்தில் இருந்து அதிரடியாக விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அஜித்தின் 62 ஆவது படத்தின் கதை, தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அஜித்தின் 62 ஆவது படத்தை வேறு ஒரு இயக்குனர் இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.