பிரபல இயக்குனரும், தனுஷின் சகோதரருமான, செல்வராகவன், இதற்க்கு முன் பீஸ்ட், சாணி காகிதம், நானே வருவேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தாலும், ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'பகாசூரன்' இந்த படம் தற்போது பிப்ரவரி 17 ம் தேதி வெளியாக உள்ளதால் தன்னுடைய தம்பியுடன் முதல் படத்திலேயே நேரடியாக மோத உள்ளார் செல்வராகவன்.
இந்தப் படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். ‘ ‘கர்ணன்’ படத்திற்கு பிறகு நட்டி முக்கிய கேரக்டரில் நடிக்க, கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, கே.ராஜன் நடித்துள்ளனர். மற்றும் மன்சூர் அலிகான், தேவதர்சினி, கூல்ஜெயந்த், பி.எல்.தேனப்பன், சசி லையா, ரிச்சா ஜாக்கோப், அருணோதயன், குட்டி கோபி நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது. தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சமூக பிரச்னையை தைரியமாக பேசி வரும் மோகன் ஜி, இந்த படத்திலும் ஆக்கபூர்வமான கருத்தை முன்வைத்துள்ளார்.