காதல் ஜோடி சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரிக்கு விரைவில் திருமணமா?

First Published | Jan 28, 2023, 12:18 PM IST

தெலுங்கு நடிகர் சர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டி இருவருக்கும் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் ஒன்றாக வந்ததைத் தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
 

சித்தார்த்

கண்ணத்தில் முத்தமிட்டாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாய்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

சித்தார்த் தமிழ் படங்கள்

இந்தப் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கொடுத்தது. அதுவும் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் கோர்ட் சீன் காண்போரை ரசிக்க வைக்கும் வகையில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது.

Tap to resize

சித்தார்த் படங்கள்

ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யனும் குமாரு, ஜிகர்தண்டா, காவிய தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, அவள், அருவம், சிவப்பு மஞ்சள் பச்சை என்று ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இந்தியன் 2

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

சித்தார்த்

நடிகர் மட்டுமின்றி பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். சமூக அக்கறையும் கொண்டவர். நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தமிழ்நாடு மாநில விருதுகள், ஜீ சினி விருதுகள், பிலிம்பேர் விருது, சர்வதேச தமிழ் திரைப்பட விருதுகள் என்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

இந்த நிலையில், சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை அதிதி ராவ் ஹைதரி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிதி ராவ் ஹைதரி

கார்த்தி நடிப்பில் வந்த காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்தார்.

அதிதி ராவ் ஹைதரி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ஹெய் சினாமிகா படம் வெளியானது. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மஹா சமுத்திரம்

கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மஹா சமுத்திரம் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். 

அதிதி ராவ் காதல்

இந்தப் படத்தின் மூலமாக இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஒருவருக்கொருவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக் கொள்வதும், பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதும் என்று தங்களது காதலை பகிர்ந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சர்வானந்த் திருமண நிச்சயதார்த்தம்

இவ்வளவு ஏன், தெலுங்கு நடிகர் சர்வானந்த் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு கூட சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதரி இருவரும் ஒன்றாக சென்று வந்துள்ளனர்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி

சர்வானந்த் மற்றும் ரக்‌ஷிதா ரெட்டிக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பின்னர், இருவரும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி காதல்?

இதுதான் தற்போது சமூக வலைதளத்தில் திருமண செய்தியாக உலா வரத் தொடங்கிவிட்டது. எப்போதெல்லாம் இருவரும் ஒன்றாக வெளியில் வருகிறார்களோ அப்பொதெல்லாம் இந்த செய்தி வெளிவரத் தொடங்கிவிட்டது.

சித்தார்த் - அதிதி ராவ் ஹைதரி திருமணம்?

ஆனால், இதுவரையில் இருவரும் இது குறித்து மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், ரசிகர்கள் பலரும் இருவரது திருமண செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Latest Videos

click me!