இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியான திரைப்படம் 'துணிவு'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்தில், அஜித் பேங்க் கொள்ளையராக நடித்திருந்தாலும், ஆக்கப்பூர்வமான கருத்தை தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.