தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட் ) எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சாக்ஷி சிங் தோனி கலந்துகொண்டார்.
அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்.ஜி.எம்’ (லெட்ஸ் கெட் மேரீட்) திரைப்படத்தில் நடிகை நதியா, நட்சத்திர நடிகர் ஹரிஷ் கல்யாண், நாயகி இவானா, நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
அஜித் - சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசியுள்ள சீனிவாச மூர்த்தி அதிர்ச்சி மரணம்!
இந்த விழாவில் கலந்து கொண்ட தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி, கிளாப் அடித்து படத்தை துவங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்,“ நாங்கள் எங்களுடைய குழுவுடன் இங்கேயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இது போன்ற அர்த்தமுள்ள கதைகள் வழங்குவதற்கும் ஆவலுடன் தயாராகயிருக்கிறோம்.” என்றார்.
தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் வணிகப்பிரிவின் தலைவராக உள்ள விகாஸ் ஹசிஜா பேசுகையில்,“ நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள ரசிகர்களிடம் அர்த்தமுள்ள கதைகள் எடுத்துச் செல்வதே தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் நோக்கம். அந்த எண்ணத்துடன் தான் இந்த படம் தொடங்கப்பட்டுள்ளது. தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நல்லக் கதைகளையும், திரைக்கதைகளையும் தேடிக்கொண்டிருக்கிறது. மேலும் பல திரைப்படங்களை தமிழில் தயாரிக்கவிருக்கிறோம் இந்த படத்தின் பணிகள் தொடங்குவதன் மூலம் நீண்ட மற்றும் பயனுள்ள ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். தமிழ் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கவும் விரும்புகிறோம்.” என்றார்.
'துணிவு' மற்றும் 'ஜெயிலர்' படத்தில் நடித்த டிக்டாக் பிரபலம் டான்சர் ரமேஷ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
தோனி என்டர்டெய்ன்மெண்ட்ஸின் படைப்புத் திறன் பிரிவின் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்,“ எல் ஜி எம் படத்தின் பணிகள் தொடங்கப்படும் தருணத்தில், படக்குழுவினருடன் உடனிருப்பதில் மகிழ்ச்சியாகவும், பரவசமாகவும் இருக்கிறேன். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை, இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி நல்லதொரு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட திரைக்கதையாக மாற்றிய மாயஜால வித்தையை நேரடியாக கண்டதால், படத்தைக் காண பேரவலுடன் காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளனர்.