ஹரிஷ் கல்யாண்
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.
ஹரிஷ் கல்யாண் திருமணம்
ஒரு நடிகராகவும், பின்னணி பாடகராகவும் திகழ்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஹரிஷ் கல்யாண்
பொதுவாக சினிமாவில் இருப்பவர்கள் தனக்கென்று மார்க்கெட் பிடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், இவர் சற்று வித்தியாசமானவராக தெரிகிறார்.
ஹரிஷ் கல்யாண்
வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஹரிஷ் கல்யாண், சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா, ஜெய் ஸ்ரீராம், பொறியாளன், வில் அம்பு, காதலி, பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு, தனுசு ராசி நேயர்களே, கசட தபற, ஓ மணப்பெண்ணே என்று பல படங்களில் நடித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan)
இதில், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்கள் இளைஞர்களை கவரும் வகையிலும், காதலர்களுக்கு பிடித்த படமாகவும் அமைந்தது.
லெட்ச் ஹெட் மேரீடு (Lets Get Married)
தற்போது ஸ்டார் மற்றும் டீசல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தோனி தயாரிப்பில் உருவாகும் முதல் தமிழ் படமான லெட்ச் ஹெட் மேரீடு (Lets Get Married) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரிஷ் கல்யாண் - இவானா
இதில், இவருக்கு ஜோடியாக நடிக்க லவ் டுடே படத்தின் மூலமாக பிரபலமான நடிகை இவானா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நதியா, யோகி பாபு ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ஹரிஷ் கல்யாண்
ரமேஷ் தமிழ்மணி இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், இதற்கு முன்னதாக அதர்வா தி ஆரிஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கியிருக்கிறார். பயணத்தை மையப்படுத்தி உருவாகும் இந்தப் ரொமாண்டிக் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹரிஷ் கல்யாண்
இதற்கு முன்னதாக பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்கள் முழுக்க முழுக்க ரொமாண்டிக் கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்தப் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஹரிஷ் கல்யாண்
இந்தப் படங்கள் மூலமாக ஹரிஷ் கல்யாணுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளும் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தவிர தெலுங்கு படமான ஜெய் ஸ்ரீராம், ஜெர்சி, காதலி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.