Published : Jan 28, 2023, 09:48 AM ISTUpdated : Jan 28, 2023, 09:50 AM IST
தமிழ் சினிமாவில் குணச்சித்திரன் நடிகராக இருக்கும், தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீனா , தமிழக கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
சிறு வயதில் இருந்தே நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வரும் பிரபல நடிகர் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனா, பல்வேறு நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மெடல்களை வாங்கி குறித்துள்ளார். ஸ்டேட் மற்றும் இன்டர்நேஷனல் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு உள்ள இவர், சமீபத்தில் கூட நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டுவில் நடைபெற்ற தெற்காசிய நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிவாகை சூடினார்.
26
இந்நிலையில் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் ஜெயவீனாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான பாபா அபரஜுதுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இவர் ராஞ்சிகோப்பைக்காக தமிழ்நாட்டின் அணிக்காக விளையாடியவர். அதேபோல் 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
46
இந்திய ஏ அணியில், சிறந்த ஆல்ரவுண்டராக இருந்து வரும் பாபா அபராஜித் மற்றும் ஜெயவீனா நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இது குறித்த புகைப்படங்களை ஜெயவீனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உறுதி செய்துள்ளார்.
தொடர்ந்து ரசிகர்கள் பலரும், தங்களுடைய வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகின்றனர். நடிகர் தலைவாசல் விஜய், தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.
66
கடந்த 25 வருடங்களாக சிறந்த குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும், திரை உலகில் அசத்தி வரும் இவர்... பல பிரபல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் ரேவதிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.