ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?

Published : Jul 12, 2022, 09:14 PM ISTUpdated : Jul 12, 2022, 09:15 PM IST

திரையுலகில் அறிமுகமாகும் நடிகைகளுக்கு என்னதான் அழகும், திறமையும், இருந்தாலும்... இதை தாண்டி இந்த சினிமா என்னும் மாய உலகில் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்க்கு அதிர்ஷ்டமும் தேவை. மிதமான அழகில் அறிமுகமான நடிகைகள் ஜெயித்த கதையும் உண்டு, பேரழகியாக இருந்தும் ஓரம்கட்டப்பட்ட நடிகைகளும் உண்டு. ஒருவர் வெற்றிக்கும் தோல்விக்கும் முக்கிய காரணமாக கருதப்படுவது அவர்களது ராசி எனலாம். சரி, திரையுலகில் அறிமுகமாகி ஆரம்பத்தில் சில தோல்வி படங்களை கொடுத்தாலும், பின்னர் முன்னணி நடிகையாக ஜெயித்த நடிகைகளும் உண்டு. இப்படி முன்னணி நடிகையாக தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்த 16 பிரபலங்களின் ராசி என்ன என்பதை பார்ப்போம்.

PREV
116
ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?

நயன்தாரா

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை, தனதாக்கி கொண்டுள்ளவர் நடிகை நயந்தாரா. ஐயா படத்தில் அறிமுகமாகி, இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர். பின்னர் அடுத்தடுத்து பல வெற்றி படங்களையும், சில தோல்வி படங்களையும் கொடுத்தாலும் தற்போது பாலிவுட் வரை சென்றுள்ளார். இவரது ராசி விருச்சிகம்.

216
Trisha

திரிஷா:

நயன்தாராவை தொடர்ந்து, திரையுலகில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக மட்டுமே நடித்து வருபவர் த்ரிஷா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலில் அணைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்துள்ள இவர், தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான 'குந்தவை'-யாக நடித்துள்ளார். 'பொன்னியின் செல்வன் ' வெளியான பின்னர் மீண்டும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படும் திரிஷாவின் ராசி ரிஷபம்.

316

சமந்தா:

நடிகை சமந்தாவின் திரையுலக பயணம் அவரது திருமணத்திற்கு பின்பு தான் சூடு பிடிக்க துவங்கியது. திறமையான நடிகையாக இருந்தாலும், துணிச்சலான கதாபாத்திரங்களை தைரியமாக தேர்வு செய்து நடிப்பது இவரது மிகப்பெரிய பலம். கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் சமந்தாவின் ராசி ரிஷபம்.

மேலும் செய்திகள்: திருமணத்தில் நயன்தாரா தோழிகளுக்கு நடுவே போஸ் கொடுத்த விக்கி..! மாப்பிள்ளை முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்..!
 

416

ஐஸ்வர்யா ராய்:

நடிகை என்கிற பெயரை திரைப்படத்தில் நடித்து விட்டாலே பெற்றுவிட முடியும். ஆனால் உலக அழகி பட்டம் என்பது அது போல் அல்ல.  திறமை மற்றும் அழகு ஆகியவற்றை தாண்டி கடின உழைப்பும் தேவை. அப்படி உலக அழகி பட்டத்தை பெற்ற பின்னர், பாலிவுட் திரையுலகில் முன்னை நடிகை என்கிற இடத்தையும் பிடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராயின் ராசி விருச்சிகம்

516

கீர்த்தி சுரேஷ்:

நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், வாரிசு நடிகை என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நுழைத்திருந்தாலும், நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட 'மகாநடி' திரைப்படத்தின் மூலம், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். சமீப காலமாக  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷின் ராசி துலாம்.

616

சிம்ரன்:

90களில் பல இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த இடையழகி சிம்ரன், ஒரு காலத்தில் விஜய், அஜித், போன்ற நடிகர்களின் முதல் தேர்வாக இருந்தவர். திருமணத்திற்கு பின்னர் இவர்க்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டாலும், தரமான கதாபாத்திரத்திற்கு காத்திருக்கிறார். இவருடைய ராசி சிம்மம்.

மேலும் செய்திகள்: உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரென்ட் உடையில்... ஒய்யார கவர்ச்சி காட்டும் பூஜா ஹெக்டே!! ரீசென்ட் போட்டோஸ்!
 

716

அனுஷ்கா செட்டி:

உயரத்திற்கு ஏற்ற உடல் எடை, அழகு என அனைத்தும் பொருந்திய தேவதை தான் நடிகை அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் தற்போது வரை தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் அனுஷ்கா செட்டியின் ராசி விருச்சிகம்.

816

தமன்னா:

கேடி படத்தில் அறிமுகமான தமன்னாவுக்கு, மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி. பின்னர் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் தமிழ் படங்களில் நடித்த இவரை உலக அளவிற்கு புகழ் பெற வைத்தது பாகுபலி திரைப்படம் தான். தற்போது பாலிவுட் திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இவருடைய ராசி தனுசு.
 

916

ஆண்ட்ரியா:

ஒரு பாடகியாக திரையுலகில் அறிமுகமாகி,  பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை ஆண்ட்ரியா. எப்படி பட்ட கவர்ச்சி வேடமாக இருந்தாலும் கதைக்கு தேவை என்றால் துணிந்து நடிக்கும் ஆண்ரியா... அடுத்ததாக மிஸ்கின் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'பிசாசு 2' படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  இவருடைய ராசி தனுசு.

மேலும் செய்திகள்: மது பார்ட்டியில் மனைவி - மகளுடன் கலந்து கொண்டாரா அஜித்? விமர்சனத்திற்கு ஆளான புகைப்படம்..!
 

1016

அசின்:

மலையாள பைங்கிளியான அசின் ஆரம்பத்தில் மாடலிங் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கி இருந்தாலும் பின்னர் தமிழில், மலையாளம், தெலுங்கு, இந்தி, போன்ற மொழிகளில் நடிக்க துவங்கினார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே... மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகினார். இவரது ராசி விருச்சிகம்

1116

அமலா பால்:

தமிழில் வெளியான திரைப்படங்களில் மிகவும் சர்ச்சையான படமாக பார்க்கப்படும் 'சிந்து சமவெளி' படத்தில் நடித்த அமலா பாலின் படத்தேர்வு ஆரம்பத்தில் சற்று பிசறி இருந்தாலும், அதைத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்த மைனா திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது. அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபால், விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் மீண்டும் படங்களில் முழு மூச்சுடன் நடிக்க துவங்கி விட்டார் இவரது ராசி விருச்சிகம்.

1216

காஜல் அகர்வால்:

தமிழ், தெலுங்கு திரையுலகில் செம்ம ஹாட்டான நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருத்தி நடிக்கும் திறமை கொண்டவர். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய இவர் குழந்தை பிறந்துள்ளதால் நடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார். இவரது ராசி மிதுனம்.

மேலும் செய்திகள்: பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!
 

1316

ஹன்சிகா:

தனுசுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் கொழு கொழு ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி குஷ்பு ஹன்சிகா, சமீப காலமாக எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து, ஸ்லிம் பிட் நடிகையாக மாறியுள்ள இவரது  ராசி சிம்மம்.

1416

டாப்ஸி:

ஆடுகளம் படத்தில் வெள்ளாவி வச்சு வெளுத்த நடிகையாய் அழகில் ஜொலித்த டாப்ஸி தற்போது தமிழ் திரையுலகை தாண்டி பாலிவுட்டில் கலக்கி வருகிறார். இவரது ராசி சிம்மம்.

1516

ஸ்ருதிஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ் திரையுலகில்  குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய தந்தையின் படத்தில் நடித்து, பின்னர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக நடிப்பு பயணத்தை துவங்கியவர். நடிகையாக மட்டும் இன்றி பாடகியாகவும் இருக்கும் இவருடைய ராசி கும்பம்.

1616

ரகுல் ப்ரீத் சிங்:

நடிகர் அருண் விஜய் நடித்த 'தடையறத் தாக்க'  படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில் அறிமுகமான ரகுல் பிரீத் சிங் ஆரம்பத்தில் நடித்த படங்கள் படு தோல்வியை சந்தித்து. எனவே தெலுங்கு திரையுலகின் பக்கம் சென்று, முன்னணி கதாநாயகியாக மாறினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவருடைய ராசி துலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories