தளபதி விஜய் ஒரு கார் பிரியர். தனக்கு பிடித்த கார்கள் மார்க்கெட்டில் வந்துவிட்டால் அதனை முடிந்தவரை விரைவாக வாங்கி கெத்து காட்டுவார். அந்த வகையில் இவரிடம், வின்டேஜ், பிஎம்டபுள்யூ, மினிகூப்பர், டொயோட்டா இன்னோவா, ஆடி ஏ8 போன்ற 14 டாப் மாடல் சொகுசு கார்கள் உள்ளது அவற்றின் விவரம் இதோ...
தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் தளபதி விஜய்யும் ஒருவர். சராசரியாக ஒரு படத்திற்கு இவர் சம்பளமாக குறைந்த பட்சம் ரூ.50 கோடி முதல் அதிக பட்சம் ரூ.70 கோடி சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. மேலும் 2022 இல் அவரது சொத்து மதிப்பு ரூ 410 கோடிக்கு மேல் என்று சில தகவல்கள் வெளியாகின.
கார்கள் வாங்குவதில் அலாதி பிரியம் கொண்ட இவர் சுமார் 14 டாப் மாடல் சொகுசு கார்களை வைத்துள்ளார். அவற்றின் விலை மற்றும் இதர விவரங்களை பார்ப்போம்...
216
Rolls Royce Ghost:
பல பிரபலங்கள் வாங்க நினைக்கும் அதிக விலை கொண்ட கார்களில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் ஒன்று. இந்த காரின் விலை ரூ.8 கோடி ஆகும்.
316
Audi A8 L
தற்போது பல பிரபலங்கள் இந்த காரை வைத்துள்ள நிலையில், ஆடி A8 L மாடல் அறிமுகமான போதே.. விஜய் இந்த காரை வாங்கிவிட்டார். இதன் விலை ரூ.1.58 கோடி ஆகும்.
விஜய் சென்னை பகுதிகளில் அதிகம் வலம் வருவது இந்த காரில் தான். இது அவருடைய ஃபேவரட் கார் என்றும் சொல்லலாம். இதன் விலை ரூ.1.30 கோடி.
516
BMW X6
ஏற்கனவே BMW கார் வைத்திருந்தாலும், தன்னுடைய கார் மோகத்தால்... BMW X6 மாடலையும் அசராமல் வாங்கி வைத்துள்ளார். இதன் விலை ரூ: 96.90 லட்சமாகும்.
616
Mercedes Benz GLA
ரூ. 87.9 லட்சம் மதிப்பு கொண்ட இந்த கார் பார்ப்பதற்கே... ஒரு பிரமாண்ட தோற்றத்தை கொடுக்க கூடியது. ஒரு வேலை இதன் தோற்றத்தில் கவரப்பட்டு தான் இந்த காரை வாங்கி இருப்பாரோ தளபதி.
பார்ப்பதற்கே செம்ம ஸ்டைலிஷாக இருக்கும் இந்த காரை பல பிரபலங்கள் உபயோகித்து வருகிறார்கள் அதில் தளபதி விஜய்யும் ஒருவர்... இந்த காரின் விலை 65 லட்சம் ஆகும்.
816
Ford Mustang:
ஸ்போர்ட்ஸ் கார்களை போல் தோற்றமளிக்கும் ஸ்டைலிஷான இந்த கார்... தளபதியின் ஃபேவரட் என கூறலாம். இந்த காரின் விலை ரூ.74 லட்சம் ஆகும்.
916
The new BMW 5 Series
BMW 5-Series
கார் பிரியர்களை பொறுத்தமட்டில்... ஒரு பிராண்ட் பிடித்து விட்டது என்றால் அந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் கார்கள் அனைத்தையும் வாங்கி விடுவது அவர்களுக்கு ஃபேஷன் ஆகிவிடும். அப்படி தான் தளபதி விஜய் BMW அறிமுகப்படுத்தும் சொகுசு கார்களை வாங்கி அடுக்கியுள்ளார். இவர் வைத்திருக்கும் BMW 5-Series காரின் விலை ரூ. 60 லட்சம்.
பார்க்கவும் சரி... ஓட்டி செல்லவும் சரி... மிகவும் ட்ரெண்டியாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கும் Volvo கார், விஜய்யின் டாப் கலெக்ஷன் கார்களில் ஒன்றாக உள்ளது. இந்த காரின் விலை ரூ.87.9 லட்சம் ஆகும்.
1116
Mercedes Benz E350D
எத்தனை சொகுசு கார்கள் வந்தாலும், பென்ஸ் காருக்கு இருக்கும் மதிப்பே தனி தான். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Mercedes Benz E350D காரை வைத்துள்ளார் தளபதி. இதன் விலை ரூ.57.14 லட்சம் ஆகும்.
1216
BMW 3 Series
BMW சீரிஸ் கார்களில் பார்க்க கொஞ்சம் ட்ரெண்டியாக இருக்கும் BMW 3 சீரிஸ் காரையும் விட்டு வைக்காமல் வாங்கி வைத்துள்ளார் தளபதி. இந்த காரின் விலை ரூ.50.7 ஆகும்.
BMW சீரிஸ் கார்களில் பார்க்க கொஞ்சம் ட்ரெண்டியாக இருக்கும் BMW 3 சீரிஸ் காரையும் விட்டு வைக்காமல் வாங்கி வைத்துள்ளார் தளபதி. இந்த காரின் விலை ரூ.50.7 ஆகும்.
1416
Mini Cooper S
சமீப காலமாக பலர் வாங்க நினைக்கும் கார்களில் ஒன்று Mini Cooper. பார்ப்பதற்கு குட்டையாகவும், கியூட்தாகவும், ஸ்மூத்தாக செல்லக்கூடியது. இதன் விலை 35.47 ஆகும்.
1516
Toyota Innova Crysta:
தன்னிடம் பல கோடி ரூபாயில் சொகுசு கார்கள் இருந்தும்... விஜய் சென்னை பகுதிகளில் அதிகம் வெளியே வரும் போது, இந்த காரை தான் பயன்படுத்துவார். இந்த காரின் விலை ரூ.23.3 லட்சம் ஆகும்.
தளபதி விஜய்யிடம் உள்ள விலை குறைவான சொகு கார் என்றால் அது Maruti Suzuki Celerio கார் தான். இதன் விலை ரூ. 5.9 லட்சம் ஆகும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.