மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
1996 ஆம் ஆண்டு காதல் பறவைகள், கோகுலத்தில் சீதை, எம் குமரன் என பல படங்களில் முகம் தெரியாதா நபராக வந்த மக்கள் செல்வனுக்கு நான் மகான் அல்ல என்னும் படத்தில் பெயரிடப்பட்ட காதாபாத்திரம் கிடைத்தது. கார்த்திக்கு நண்பனாக கணேஷாக நடித்து இருந்தார் விஜய் சேதுபதி.
பின்னர் பலே பாண்டியன் படத்திலும் அடையாளம் தெரியாத ஒருவராக நடித்த இவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தவர் சீனு ராமசாமி தான். இவர் இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று எனும் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.
வசுந்தரா நாயகியாக நடித்த இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடித்திருப்பார். இது அவரது நூறாவது படமாகும். விமர்சனங்கள் ரீதியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படம் 58 வது தேசிய திரைப்பட விருது விழாவில் இடம் பெற்று சரண்யாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் வைரமுத்துவிற்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது.
தேனி பின்னணிகள் நடக்கும் கதையாக அமைந்துள்ள இதில் ஆடு மேய்ப்பவராக நாயகன் வருவார். ஒரு விதவைத் தாயின் மகனாக வரும் நாயகன் திருடர்கள் கும்பலை எதிர்த்து போராடுகிறார். அந்த எதிரி வீட்டு பெண்ணை காதலிக்கும் தன மகனிடம் சரண்யா (வீராகி) அவரது தந்தையை நாயகியின் குடும்பத்தார் தான் கொலை செய்தார்கள் என்னும் உண்மையை தெரிவிக்கிறார். இதன் பின்னர் எவ்வாறு நாயகன் அந்த குடும்பத்தை பழிவாங்கி தன் காதலை கரம் பிடிக்கிறார் என்பதை படத்தின் மீதி கதையாகும்.
34
VIJAY SETHUPATHI
படம் முதலில் மிதமான வெற்றிகளை தான் பெற்றிருந்தது பின்னர் சிறிது காலம் கழித்து படம் வைரலாகத் தொடங்கியது. விஜய் சேதுபதியுடன் சமீபத்தில் மீண்டும் கைகோர்த்து இருந்த சீனு ராமசாமி கூட்டணியில் மாமனிதன் படம் வெளியானது. இந்த படம் மிதமான வரவேற்பையே பெற்றது.
இந்நிலையில் மாமனிதன் படம் குறித்தான ப்ரமோஷன் விழாவின் போது இயக்குனர் தனது பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டதோடு தனது நாயகன் குறித்து பெருமிதமாக பேசிய பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
44
VIJAY SETHUPATHI
தென்மேற்கு பருவக்காற்று படம் வெளியான சமயத்தில் கமலஹாசனின் மன்மத அம்பு படமும் வெளியானது. அப்போது தானும் தன் நாயகனும் திரையரங்கு வாசலில் ரசிகர்கள் எந்த படத்திற்கு செல்கிறார்கள் என்பதை வேடிக்கை பார்த்தபோது கமலுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததாகவும் இதனால் கமலின் போஸ்டரை பார்த்து தங்கள் படம் பாதிக்கப்படுமோ என பயந்ததாவும் கூறினார்.
அதோடு அன்று கமலின் படத்தை பார்த்து பயந்த விஜய் சேதுபதி இன்று அவருக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இதற்கெல்லாம் அவருடைய விடாமுயற்சியும் திறமையும் தான் காரணம் என பாராட்டி மகிழ்ந்துள்ளார் சீனு ராமசாமி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.