இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. இந்த படத்தில் ரஜினிகாந்த் சரவணன் என்கிற மனோதத்துவ நிபுணராகவும், வேட்டையன் என்ற ராஜா கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
இப்படம் மலையாளத்தில் நடிகர் மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மணிச்சித்திரத்தாழு என்கிற படத்தில் ரீமேக் ஆகவே எடுக்கப்பட்டது. 'சந்தரமுகி' படம் வெளியாகி 17ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் பி.வாசு கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்து வருகிறார். முதலில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை ரஜினிகாந்திடம் கூற அவர் ஒரு சில காரணங்களால், இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
Chandramukhi 2
மேலும் 'சந்திரமுகி 2' படத்தின் இரண்டாம் பாகத்தில் வேட்டைய மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இரண்டாம் பாகம் முழுவதும் சந்திரமுகி மற்றும் வேட்டையன் கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் மோதல் தான் படமாக்க பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு இன்று மைசூரில் துவங்கியுள்ளதை அடுத்து, இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் தன்னுடைய குருவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது தற்போது வைரலாகி வருகிறது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், மிகப்பிரமாண்டமாக உருவாக உள்ள 'சந்திரமுகி 2' படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. அதே போல் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.