சுஷ்மிதா சென்னும், மறைந்த மினல் மோடியும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் அடிக்கடி ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக பார்த்துள்ளனர் என பல பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது.
முன்னாள் ஐபிஎல் தலைவரான லலித் மோடி தற்போது புதிய காதல் உறவு குறித்து அறிவித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியும், பாலிவுட் பிரபலமுமான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது மறு காதல் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது திருமணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். லலித் மோடியின் இன்ஸ்டாகிராம் பதிவு வருவதற்கு முன்பு வரை சுஸ்மிதா லலித் மோடி இருவரும் ஒன்றாக இருந்ததற்கான எந்த தடயமும் வெளிவரவில்லை. இந்நிலையில் இவர்களின் போஸ்டர் தீயாக பரவுகிறது.
25
lalit modi - sushmita sen
இதன் மூலம் லலித் மோடி சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது பதிவில் "எனது சிறந்த தோற்றமுடைய துணைவி சுஷ்மிதா சென். ஒரு புதிய தொடக்கம் இறுதியாக ஒரு புதிய வாழ்க்கை. நிலவுக்கு மேல் என குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் லலித் மோடியின் முன்னாள் மனைவி மினல் குறித்து தற்போது பார்க்கலாம். மினல் மோடி கடந்த 2018 ஆம் ஆண்டு தனது 64 வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலமானார்.
மினலின் முதலில் சவுதி அரேபியாவை சேர்ந்த ஜாக் சக்ரானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். முன்னதாக நைஜீரியாவில் இருந்து லண்டனுக்கு சென்று பின்னர் சவுதி அரேபியாவில் பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்தார் மினல். அப்போது காதல் வயப்பட்டு ஜாக்கை திருமணம் செய்து கொண்டார். இவர் கர்ப்பமாக இருந்தபோது அவரது கணவரை மோசடி புகாரின் பெயரில் சவுதி அரேபியா போலீசார் சிறையில் அடைத்தனர்.
பின்னர் லண்டன் திரும்பிய மினல், முதல் மகள் கரிமாவை பெற்றெடுத்த பின் இந்தியாவிற்கு வந்தார். இங்கு லலித் மோடியின் தாயார் பினாவுடன் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அந்த தொடர்பின் மூலம் லலித் மொடிக்கு அறிமுகமானார் மினல்.
45
lalit modi - minal modi
இவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது இதை அடுத்து இருவரும் திருமணம் செய்யப் போவதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.. லலித் மோடியை விட மினல் சுமார் பத்து வயது மூத்தவர் என்பதால் அவரது குடும்பத்தினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் அவதூறுகளை உருவாக்குவேன் என்று லலித் மிரட்டியதால் இவர்களது திருமணம் குடும்ப சம்மதத்துடன் நடந்தாக சொல்லப்படுகிறது.
இவர்களது திருமணம் அப்போது வைரலாக பேசப்பட்டது. பின்னர் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன 1993 அலியா என்ற மகளும் 994 ருசிர் என்ற மகனும் பிறந்தனர். மகிழ்ச்சியாக வாழ்ந்த இந்த குடும்பத்தில் பேரதிற்சியாக 2000-ல் மினல் கேன்சரால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இவர் காலமானார்.
55
lalit modi - minal modi
இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து தனது மறு காதல் குறித்து அறிவித்துள்ளார் 58 வயதான லலித் மோடி. இதில் சுவாரசியம் என்னவென்றால் சுஷ்மிதா சென்னும், மறைந்த மினல் மோடியும் தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்தவர்கள். இவர்கள் மூவரும் அடிக்கடி ஐபிஎல் போட்டிகளை ஒன்றாக பார்த்துள்ளனர் என பல பத்திரிகைகளில் எழுதப்பட்டு வருகிறது.