தளபதி விஜய்.. தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். தமிழ் திரை உலகை பொறுத்தவரை, 150 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அவர், திடீரென வெளியிட்ட ஒரு அறிவிப்பு அவருடைய திரை உலக ரசிகர்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. இன்னும் சொல்லப் போனால் இன்று இளம் நடிகர்களாக கலக்கி வரும் பலருக்கும் அது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்தது என்றே கூறலாம்.
அதுதான் அவர் ஏற்றுக்கொண்ட இரு திரைப்பட பணிகளை முடித்த பிறகு, தனது கலை உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. முழு நேர அரசியல் தலைவராக களமிறங்க போகிறேன் என்கின்ற அறிவிப்பு. உண்மையில் அவருடைய திரையுலக ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய கசப்பான செய்தியாக இருந்தாலும், அரசியல் ரீதியாக அவரை பின் தொடர்பவர்களுக்கு, இது மிகப்பெரிய இனிப்பான செய்தியாகவே பார்க்கப்பட்டது.
மஞ்சள் வீரனில் நீக்கம்; சீப் பப்ளிசிட்டிக்கு என்னை பயன்படுத்தினார் இயக்குனர் - பொங்கிய டிடிஎஃப் வாசன்!