இந்த சூழலில் தான் கடந்த பல வாரங்களாகவே மஞ்சள் வீரன் திரைப்படம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், சில நாள்களுக்கு முன்பு மஞ்சள் வீரன் திரைப்படத்தின் இயக்குனர் செல்வம், தனது திரைப்படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்குவதாக ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அவர் ஷூட்டிங்கிற்கு வராமல் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் வாசன் இப்பொது வெளியிட்ட பதிவில் இந்த திரைப்படம் தொடர்பாக இயக்குனர் செல்லும் என்னிடம் எந்த வகையிலும் பேசவில்லை நானும் அவரிடம் பேச தொடர்பு கொண்ட போது அவர் என்னிடம் பேச விரும்பவில்லை அவர் கூறியிருந்தால் நானே இந்த திரைப்படத்திலிருந்து விலகி இருப்பேன் ஆனால் ஷூட்டிங்கிற்கே அழைக்காமல் நான் நடிக்க வரவில்லை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் தம்பி தம்பி என்று என்னை அழைத்து அவருடைய சீப் பப்ளிசிட்டிக்காக என்னை பயன்படுத்திக் கொண்டார் செல்லம் என்று காட்டமான பதிலை கொடுத்திருக்கிறார்.
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம்!