உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம்!

Published : Oct 07, 2024, 06:56 PM IST

அஜித்குமாரின்  'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம், அந்தமானில் நடைபெற்ற... ஹார்லி - டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தியுள்ளது. இந்த சாதனைக்காக ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தல-க்கு தெரிவித்து வருகிறார்கள்.  

PREV
14
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அஜித்தின் 'வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours’ நிறுவனம்!
Ajith Venus Motorcycle Tours company

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், திரையுலகை தாண்டி தனக்கு பிடித்த பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில்... அஜித்துக்கு மிகவும் பிடித்தமான ஒன்று பைக் ரைடிங் மற்றும் கார் ரைடிங். உலகம் முழுவதும் பைக் மூலம் சுற்றி வர வேண்டும் என்பதை, தன்னுடைய இலக்காக வைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் அஜித்.. அடுத்த ஆண்டு, ஐரோப்பாவில் நடைபெற உள்ள கார் ரேஸ் போட்டியிலும் கலந்து கொள்ள கடந்த ஒரு மாதமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் காரணமாகவே இன்னும், விடாமுயற்சி படங்களில் சில காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடைவதில் தாமதம் ஏற்படுட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

24
Ajith Venus Motorcycle Tours company

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, தனது தொழில்முறை ரேஸிங் டீமை அறிமுகப்படுத்திய அஜித், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours என்கிற நிறுவனம் ஒன்றையும் துவங்கி உள்ளதாக அறிந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிறுவனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில்,  மிகப்பெரிய ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள் ரைடை நடத்தியதாக தற்போது உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

24 மணிநேரத்தில் நடந்த எலிமினேஷன்; உடைந்து அழுத சாச்சனா! நெஞ்சை உருக வைத்த வீடியோ

34
Ajith Venus Motorcycle Tours company

மேலும் இந்தியா, ஸ்காட்லாந்து, போர்ச்சுகல், வியட்நாம், தாய்லாந்து, அரேபியன் ஒடிஸி (யுஏஇ, ஓமன்), பெஸ்ட் ஆஃப் ஆல்ப்ஸ் (ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி) போன்ற நாடுகளிலும் கடந்த ஒரு வருடமாக அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours வழி நடத்தியுள்ளது. இவர்களின் ஒவ்வொரு பயணத்தை மிகவும் தெளிவாகவும்... கவனமாகவும் திட்டமிட்டு வழிநடத்தி செல்கின்றனர்.  ஹார்லி-டேவிட்சன் மெரினா பிரிவு, சென்னை மற்றும் ஹார்லி-டேவிட்சன் பஞ்சாரா பிரிவு, ஹைதராபாத் ஆகியவற்றுடன் இணைந்து வீனஸ் மோட்டார் சைக்கிள் Tours நிறுவனம் இந்த நிகழ்வை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நடத்தியுள்ளது. 

44
Ajith Venus Motorcycle Tours company

அஜித்தின் மோட்டார் சைக்கிள் நிறுவனம் நிகழ்த்திய இந்த சாதனை, இந்தியாவில் வளர்ச்சி பெரும் மோட்டார் சைக்கிள் பயணங்களின் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த சாதனை ஒரு மையில் கல்லாகவும் பார்க்க படுகிறது. இது போன்ற மோட்டார் சைக்கிள் பயணங்கள் மற்றும் டூரிசம், பயனாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தையும் உருவாக்கி கொடுக்கிறது என்பதில் எந்த மாற்று கருதும் இல்லை.

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?

Read more Photos on
click me!

Recommended Stories