இந்த சூழலில் "புக் மை ஷோ" நிறுவனத்தின் மூலம், கடந்த 2023ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை புக்கிங் நடைபெற்றதால் சாதனை படைத்த திரைப்படங்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்" திரைப்படம் சுமார் 80 ஆயிரம் டிக்கெட்டுகளை பெற்று பத்தாவது இடத்தில் இருக்கிறது. மேலும் தங்கலான், அயலான், அரண்மனை 4, மகாராஜா, இந்தியன் 2 மற்றும் ராயன் என்று ஒன்பதாம் இடத்தில் இருந்து நான்காம் இடம் வரை மேலே குறிப்பிட்ட படங்கள் இடம்பெற்றது.
இந்த நிலையில் இப்பட்டியலில் தளபதி விஜயின் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் 4.51 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. அதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தளபதி விஜயின் "லியோ" திரைப்படம் சுமார் 7.30 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம் சுமார் 9.21 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையாகி முதல் இடத்திலேயே இருந்து வருகின்றது. இனி எதிர்வரும் திரைப்படங்கள் இந்த சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே.. சீரியலில் நடிக்கும் இவர்கள் எல்லாம் சகோதர - சகோதரிகளா?