ஹிப்ஹாப் ஆதியின் இந்த மாஸ் ஹிட் பாடல்; இயக்குனர் டீ குடிக்க போன கேப்ல எழுதப்பட்டதா!

Published : Oct 07, 2024, 02:12 PM IST

இயக்குனர் மோகன் ராஜா டீ குடிக்க சென்ற நேரத்திற்குள் தனி ஒருவன் படத்திற்காக மாஸ் ஹிட் பாடலை எழுதி அசத்தி இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

PREV
14
ஹிப்ஹாப் ஆதியின் இந்த மாஸ் ஹிட் பாடல்; இயக்குனர் டீ குடிக்க போன கேப்ல எழுதப்பட்டதா!
Hip Hop Adhi

ரீமேக் இயக்குனர் என பெயரெடுத்தவர் மோகன் ராஜா. இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் பிற மொழிகளில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்கள் தான். தன் மீதுள்ள ரீமேக் இயக்குனர் என்கிற பெயரை உடைக்க முடிவெடுத்து அவர் இயக்கிய படம் தான் தனி ஒருவன். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியின் மூலம் தன்மீது இருந்த விமர்சனத்தை தகர்த்தெறிந்தார் இயக்குனர் மோகன் ராஜா. தனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு ஹிப்ஹாப் ஆதியின் இசையும் ஒரு முக்கிய காரணம்.

24
Hip Hop Tamizha Adhi

பொதுவாகவே படங்களுக்கு பாடல்கள் வாங்கும்போது இயக்குனர்கள் பாடலின் சூழலை சொல்லி பாட்டை வாங்கிய பின்னர் தான் ஷூட்டிங்கே போவார்கள். ஆனால் தனி ஒருவன் படத்தை எடுத்து முடித்துவிட்டு. இந்த இடங்களில் எல்லாம் எனக்கு பாடல்கள் வேண்டும் என கேட்டு வாங்கினாராம் இயக்குனர் மோகன் ராஜா. அப்படி படத்தை பார்த்ததும் தனக்கு இசையில் புகுந்து விளையாட நிறைய ஸ்கோப் இருப்பதை உணர்ந்த ஆதி இசையமைக்க தொடங்கினாராம்.

இதையும் படியுங்கள்... அட்ரா சக்க! 24 மணிநேரத்தில் வெளியே போக தயார்; கெத்தாக ஆட்டத்தை ஆரம்பித்த ஜாக்குலின்!

34
Thani Oruvan Movie

அதுமட்டுமின்றி தனி ஒருவன் படத்தில் பணியாற்றிய போது, வெளியே சென்று எந்த இயக்குனரை பார்த்தாலும் இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என சொல்லுவாராம் ஆதி. அந்த அளவுக்கு அப்படத்தின் மீது மிகவும் ஈடுபாடுடன் பணியாற்றி இருக்கிறார் ஆதி. அப்படி அப்படத்திற்காக பாடல் கம்போசிங் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் மோகன் ராஜா, டீ குடிக்க வெளியே சென்றிருக்கிறார். அவர் போன கேப்பில் ஹிப்ஹாப் ஆதி ஒரு மாஸ்ஹிட் பாடலை எழுதி இருக்கிறார்.

44
Theemai Dhaan Vellum Song

அந்தப்பாடல் தான் தனி ஒருவன் படத்தில் இடம்பெறும் தீமை தான் வெல்லும் பாடல். இந்தப் பாடலை தான் இயக்குனர் டீ குடிக்க போன கேப்பில் எழுதி இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. அப்பாடலில் சிவனாய் இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான் என்கிற வரி இயக்குனர் மோகன் ராஜாவுக்கு மிகவும் பிடித்த வரியாம். இப்படி ஒரு சில நிமிடங்களில் எழுதி முடிக்கப்பட்ட இந்த பாடல் தான் பலரது போன்களில் இன்று ரிங்க்டோனாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்... ரஜினி நடிக்க மறுத்த பாடலை பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கிய இளையராஜா - என்ன பாட்டு தெரியுமா?

click me!

Recommended Stories