Rajinikanth, Ilaiyaraaja
பி வாசு இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மன்னன். கன்னட படத்தின் ரீமேக்காக இப்படத்தை இயக்கி இருந்தார் வாசு. ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த இப்படத்தில் விஜயசாந்தி, குஷ்பு ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் கெரியரில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த படங்களில் மன்னன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தின் வெற்றிக்கு இசைஞானி இளையராஜாவின் இசையும் முக்கிய பங்காற்றியது. இப்படத்தின் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியது.
Ilaiyaraaja
இப்படத்தில் இடம்பெறும் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடல், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலாக உள்ளது. இப்பாடல் தான் மன்னன் படத்தில் ஓப்பனிங் சாங் ஆக வரும். இப்பாடல் கம்போசிங்கின் போது இளையராஜாவிடம் ஒரு ஆரம்ப பாடல் வேண்டும் என இயக்குனர் வாசு கேட்டிருக்கிறார். வழக்கமாக ரஜினிகாந்துக்கு ஓப்பனிங் பாடல் என்றால் அது குத்துப்பாடலாக இருக்கும், ஆனால் இளையராஜா இப்படத்திற்காக மாத்தியோசித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... பாலிவுட் நடிகை ரேகாவின் லிவ்-இன் ரிலேசன்? யார் அந்த நபர்?
isaignani ilaiyaraaja
அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை ரஜினிகாந்தின் மன்னன் படத்தில் ஓப்பனிங் பாடலாக கொடுக்கலாம் என சொல்லி இருக்கிறார். இந்த விஷயம் ரஜினிகாந்துக்கு தெரியவந்ததும், இது அம்மா செண்டிமெண்ட் பாடலாச்சே இது எப்படி ஓப்பனிங் பாடலாக இருக்க முடியும் என குழம்பிப் போய் இருக்கிறார் சூப்பர்ஸ்டார். ஒருகட்டத்தில் இப்பாடலில் தன்னால் நடிக்க முடியாது என ரஜினிகாந்த் இயக்குனர் பி வாசுவிடம் ஓப்பனாகவே சொல்லிவிட்டாராம்.
Mannan movie
பின்னர் இந்த விஷயம் இளையராஜா காதுக்கு செல்ல, அவர் ரஜினியிடம் விளக்கிக் கூறி இருக்கிறார். இதுவரை நீங்கள் நடித்த படங்களில் ஓப்பனிங் சாங் எல்லாம் துள்ளலான பாடல்களாக இருந்துள்ளன. உங்கள் ரசிகர்களும் அதை கொண்டாடி இருக்கிறார்கள். நீங்களும் அதைதான் எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது. ஆனால் நான் நினைப்பது என்னவென்றால், இப்படி ஒரு செண்டிமெண்ட் பாடல் ஆரம்ப பாடலாக இருந்தால் அது உங்களை மிகப்பெரிய அளவில் ரீச் ஆக்கும்.
Amma endralaikatha song
குறிப்பாக குடும்பங்கள் இந்த பாடலை கொண்டாடுவார்கள். பெண்களுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் என இளையராஜா எடுத்துக் கூறியதை அடுத்து தான் மன்னன் படத்தில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலில் நடிக்க சம்மதித்தாராம் ரஜினிகாந்த். அன்று ரஜினி நடிக்க மாட்டேன் என மறுத்த பாடல் தான் இன்று அவரை சூப்பர்ஸ்டார் என்கிற அந்தஸ்துக்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இதையும் படியுங்கள்... காதல் மனைவி ஷாலினி உடன் வீதி உலா வந்த அஜித்குமார் - வைரலாகும் வீடியோ