கனவோடு வந்து.. கண்ணீரோடு வெளியேறிய முதல் பிக்பாஸ் போட்டியாளர் இவர் தான்!

First Published | Oct 7, 2024, 11:51 AM IST

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த 24 மணிநேரத்தில் மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு வெளியேறிய போட்டியாளர் யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Bigg Boss Tamil season 8

விஜய் டிவியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று துவங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ் சீசன் 8. கடந்த ஏழு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை வந்த கமலஹாசன் வெளியேறிய நிலையில், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி உள்ளார்.

விஜய் சேதுபதி, உலக நாயகன் கமலஹாசனுக்கு இணையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா? என்கிற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்... மிகவும் சைலன்ட்டாகவும், எதார்த்தமாகவும் இடையிடையே நக்கலோடு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது, பல ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக ரஞ்சித் - அர்னவ் போன்ற போட்டியாளர்களுக்கு முதல் நாளே தக்க பதிலடி கொடுத்தார்.  இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

Bigg Boss Tamil season 8 First Eviction

பிக் பாஸ் தமிழ் 8 சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், உள்ளே செல்லும் ஒவ்வொருவருக்கும் பிக் பாஸ் டைட்டில் ஜெயிக்கும் போது அவர்களுக்கு வழங்கப்பட உள்ள டிராஃபியின் டூப்ளிகேட் ஒன்று கையில் கொடுக்கப்பட்டது. இந்த டிராஃபியை யார் 106 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் எடுத்து வந்து என் கையில் கொடுக்கிறீர்களே? அவர்களுக்கு நான் ஒரிஜினல் ட்ராஃபியை கொடுப்பேன் என வாழ்த்தி விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் உள்ளே அனுப்பி வைத்தார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், முதல் போட்டியாளராக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்ட நிலையில், இவரைத் தொடர்ந்து சாஞ்சனா நேமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, ஜெஃப்ரி, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், அர்னவ், பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தார்ஷிகா, விஜே விஷால், முத்து குமரன், சௌந்தர்யா நஞ்சுட்டன், ஜாக்குலின், என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிக்பாஸ் ஷூட் முடிந்ததும் BMW காரை பரிசாக கொடுத்த விஜய் சேதுபதி - யாருக்கு தெரியுமா?

Tap to resize

Un Expected Eliminations

உள்ளே நுழைந்த சில மணி நேரங்களிலேயே பிக் பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போட்டு, ஆண் போட்டியாளர்கள் மற்றும் பெண் போட்டியாளர்களை முட்டி மோத வைத்த வைத்தார் பிக்பாஸ். பின்னர் ஆண் போட்டியாளர்கள் ஏதேனும் ஒரு வாரம், பெண் போட்டியாளர்கள் யாரும் ஆண்களை நாமினேட் செய்யக்கூடாது என்கிற நிபந்தனையோடு பெண் போட்டியாளர்களுக்கு பெரிய ரூம்மை விட்டுக் கொடுத்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எப்படி ஆட்டம் புதுசு.. ஆட்களும் புதுசு என கூறியுள்ளாரோ... அதேபோல் இந்த முறை ரூல்சும் புதுசாகவே உள்ளது. பொதுவாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் ஒரு வாரம், அல்லது இரண்டு வாரத்திற்கு பின்னரே நாமினேட் செய்து எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறி உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 24 மணி நேரத்திலேயே மற்ற போட்டியாளர்கள் நேரடி நாமினேஷன் செய்து அதிலிருந்து ஒரு போட்டியாளர் 24 மணி நேரத்தில் வெளியே அனுப்பட்டுள்ளார். 
 

Sachana Namidas

இதுகுறித்து தற்போது வெளியாகி உள்ள தகவலில், முதல் நாளே நடிகையாக வேண்டும் என்பதற்கு சிறந்த பிளாட் ஃபார்மாக பிக் பாஸ் மாறும் என்கிற கனவோடு உள்ளே வந்த 'மகாராஜா' பட நடிகை சாச்சனா மற்ற போட்டியாளர்கள் சிலரால் நாமினேட் செய்யப்பட்டு, முதல் நாளே கண்ணீருடன் வெளியேறி உள்ளது உறுதியாகி உள்ளது.

சாச்சனா விஜய் சேதுபதியுடன் 'மகாராஜா' படத்தில் அவருக்கு மகளாக நடித்தவர். எனவே இவருக்கு மட்டும் விஜய் சேதுபதி, உனக்கு என்னை அப்பானு கூப்பிட தோணுச்சுனா அப்பான்னு கூப்பிடு, சார்னு கூப்பிட தோணுச்சுனா சார்னு கூப்பிடு என சிறப்பு சலுகை கொடுத்தார். ஆனால் 24 மணி நேரத்தில் இவர் வெளியேறி உள்ளது, ரசிகர்கள் யாரும் எதிர்பாராத ஒன்று எனலாம். 

24 மணிநேரத்திற்குள்ளாக முதல் எவிக்‌ஷன் – நாமினேஷனை தொடங்கிய ஹவுஸ்மேட்ஸ் – வெளியேறும் அந்த ஒருவர் யார்?

Latest Videos

click me!