24 மணிநேரத்திற்குள் முதல் எவிக்‌ஷன் – நாமினேஷனை தொடங்கிய ஹவுஸ்மேட்ஸ் – வெளியேறும் அந்த ஒருவர் யார்?

First Published | Oct 7, 2024, 10:46 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று தொடங்கிய நிலையில், 24 மணி நேரத்திற்குள் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது யார் என்று தெரிந்து கொள்ள போட்டியாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

Vijay Sethupathi Bigg Boss Tamil Season 8

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. பல தங்களது கனவுகளை நனவாக்க 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தனர். கலைஞனுக்கு வாய்ப்பு கொடுக்கும் சிறந்த மேடையாக பிக்பாஸ் உருவெடுத்து வருகிறது. இதுவரையில் நடைபெற்ற 7 சீசன்களில் கலந்து கொண்ட பல கலைஞர்களுக்கு இந்த மேடை புதிய வாழ்க்கையை கொடுத்திருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் சீரியல் நடிகை தாமரையை சொல்லலாம். ஒரு சாதாரண கரகாட்ட கலைஞராக பிக்பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த தாமரையை இந்த பிக்பாஸ் அவரது வாழ்க்கையை மாற்றி கொடுத்திருக்கிறது. அதே கனவுகளுடனும், ஆசைகளுடனும் தங்களது வாழ்க்கையை மாற்ற கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி18 போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

Bigg Boss Tamil Season 8

அவர்களில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சவுந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என சரிசமமாக உள்ளதால் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ஆக இந்த சீசன் மாறி உள்ளது. அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் நடக்கும் ஆட்டமே பிக்பாஸ் தமிழ் சீசன் 8.

Tap to resize

Bigg Boss Tamil Season 8 First Eviction

இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நேற்றைய முதல் நாள் முடியும் போது போட்டியாளர்களிடம் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார் என்றார். மேலும், அது யாரென்று தெரிந்து கொள்ள ஆசைப்படாமல், குழப்பமடையாமல் போய் தூங்குங்கள் என்றார். அது யாரென்று தெரிந்து கொள்ள ஒவ்வொரு போட்டியாளரும் ஆர்வம் உடன் இருக்கும் நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 முதல் புரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டிருக்கிறது.

Bigg Boss Tamil 1st Eviction Process

அதில், எலிமினேஷனுக்காக ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்களை நாமினேட் செய்கின்றனர். 24 மணி நேரத்திற்குள்ளா நடக்கும் முத எவிக்‌ஷனில் சத்யா, ஜாக்குலின், அர்னவ், ரவீந்தர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் ஒன்று ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் விஜய் சேதுபதியின் மகளாக வந்த சாச்சனா நேமிதாஸ் எவிக்‌ஷன் செய்யப்பட வேண்டும். இவர்களைத் தவிர் மற்றவர்கள் விஜய் டிவி பிரபலங்கள், இன்னும் சிலர் கானா பாடகர், பேச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil Season 8 Nomination

ஆதலால், ரவீந்தர் சந்திரசேகர் அல்லது சாச்சனா நேமிதாஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனினும் உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் இந்தப் பதிவு படித்துவிட்டு போட்டியாளர்களை பெயர்களை கமெண்டாக பதிவிடுங்கள்…

Latest Videos

click me!