பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, மராத்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதில் தமிழ் பிக்பாஸை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதே போல் தெலுங்கு பிக்பாஸை நாகார்ஜுனாவும், கன்னட பிக்பாஸை சுதீப்பும், மலையாள பிக்பாஸை மோகன் லாலும், இந்தி பிக்பாஸை சல்மான் கானும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
24
Shrutika
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய இந்தியில் தான். அங்கு இதுவரை 17 சீசன்கள் முடிவடைந்து உள்ளது. இந்த 17 சீசன்களையும் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார். நேற்றும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கியதை போல் இந்தியில் 18-வது சீசன் தொடங்கி உள்ளது. வழக்கம்போல் சல்மான் கான் தான் இம்முறையும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், அதில் புதிய ட்விஸ்ட் ஆக இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக விஜய் டிவி பிரபலம் ஒருவர் பங்கேற்று இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ஸ்ருதிகா தான். இவர் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ஸ்ரீ என்கிற படத்தில் நடித்தவர். அதன்பின்னர் திருமணமாகி செட்டில் ஆன ஸ்ருதிகா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி, பைனல் வரை சென்று டைட்டிலையும் தட்டிச் சென்றார். அவர் தற்போது டைட்டில் வெல்லும் முனைப்போடு இந்தி பிக்பாஸில் களமிறங்கி இருக்கிறார்.
44
Hindi Bigg Boss Contestant Shrutika
தமிழ் நாட்டு பிரபலங்கள் பிற மாநில பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது புதிதல்ல, இதற்கு முன்னர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், ஷகீலா, கிரண், பிந்து மாதவி போன்ற தமிழ்நாட்டு பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இருப்பினும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல் தமிழ் பெண் ஸ்ருதிகா என்பது குறிப்பிடத்தக்கது.