அது மட்டும் அல்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் விஜய் டிவியை சேர்ந்த மா.கா.பா ஆனந்த், ரோபோ சங்கர் மாற்று TSK உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்க உள்ளதாக சில தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது. ஆனால் இப்பொழுது 18 போட்டியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நடிகர்கள் குறித்து வெளியான தகவல்கள் வெறும் வதந்தி என்று இப்போது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, கடந்த சில சீசன்களாகவே சர்ச்சை நடிகர் பப்லூவின் பெயர் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றது, ஆனால் அவர் பங்கேற்றப்பாடில்லை.