இந்த சூழலில் "ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு" என்கின்ற வகையில் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். மக்களோடு மக்களாக மிகவும் எளிமையாக பழகும் குணம் கொண்ட விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உருவெடுத்துள்ளது மிகப்பெரிய வரவேற்புகளை பெற்று வருகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசனுக்கு சுமார் 120 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், விஜய் சேதுபதிக்கு இந்த முறை அதில் பாதி அளவில் தான் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.