கடைசியா வந்தாலும்; கலகலப்பாக BB வீட்டில் என்ட்ரி கொடுத்த ஜாக்குலின் - ஆர்மி ஆரமிக்கப்படுமா?

First Published | Oct 7, 2024, 12:05 AM IST

Bigg Boss Tamil Season 8 : தன்னுடைய வித்தியாசமான குரலாலும், கலகலப்பான பேச்சாலும் மக்கள் மனதை கவர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

Jacquline

இதுவரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செம்மையான முறையில் வழி நடத்தி வருகிறார். இந்த முதல் எபிசோடிலேயே மக்கள் அவருக்கு அபிரிவிதமான ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்றே கூறலாம். பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிகுந்த உற்சாகத்தோடு தனக்கே உரித்தான ஸ்டைலில் அவர்களை வரவேற்று, ஒவ்வொருவருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனின் லோகோ பொருத்திய பரிசு பொருள் ஒன்றை கொடுத்து உள்ளே அனுப்பிவைத்தார் விஜய் சேதுபதி.

"நடக்குற நல்லத, பேசி கெடுத்துறாதீங்க" சிறப்பாக கலாய்த்து நடிகர் அர்னவை BB வீட்டுக்குள் அனுப்பிய VJS!

Anchor Jacquline

இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது போட்டியாளராக கலகலப்பாக இப்போது என்ட்ரி கொடுத்திருக்கிறார் பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை ஜாக்குலின். தேன்மொழி பி.ஏ என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் விஜய் டிவியில் நடிகையாக தன்னுடைய பயணத்தை ஜாக்லின் தொடங்கினார். அதன் பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளியாக வளம் வந்தது குறிப்பிடத்தக்கது.


Vijay tv Anchor Jacquline

இவருடைய வித்தியாசமான குரலே இவருக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பை கொடுத்தது. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளினியாக பயணித்து வந்த ஜாக்குலின், பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்கின்ற திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகும் ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறுக் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கிறார்.

kolamavu kokila

கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகத்தில் ஆட்டிப்படைத்த கொரோனா தொற்று நோய் காரணமாக முடங்கிய பலருடைய வாழ்க்கையில் ஜாக்குலினின் வாழ்க்கையும் ஒன்று. சுமார் மூன்று ஆண்டு காலம் பெரிய அளவில் கலைத்துறை பக்கம் பயணிக்காமல் இருந்த அவர், தற்பொழுது மீண்டும் தனது கலை பயணத்தை தொடங்கி இருக்கிறார். அதன் முதல் படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் அவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

"சின்னத்திரையின் செல்லப்பிள்ளை" BB வீட்டில் ஜாலியாக நுழைந்த நடிகர் VJ விஷால்! வாழ்த்திய VJS!

Latest Videos

click me!