விஜய் டிவியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வருபவர் தான் VJ விஷால். பட்டப்படிப்பு முடித்த பிறகு சொந்தமாக தொழில் தொடங்கி அதில் பயணித்து வந்த விஜய் விஷால். அதற்கு முன்னதாக பண்பலை தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு விஜய் டிவியில் உதவி இயக்குனராக தான் தனது பணியை அவர் தொடங்கினார். விஜய் டிவியில் பணியாற்றி வரும் பிரபல இயக்குனர் தாம்சனிடன் தான் உதவி இயக்குனராக கலக்கப்போவது யாரு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.