குறிப்பாக கானா பாடகர் ஜெஃப்ரி இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார். அதேபோல மகாராஜா திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த நடிகை சஞ்சனா நமிதாஸ் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல விஜய் டிவியின் மூத்த தொகுப்பாளராக விளங்கி வந்த தீபக் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். பிரபல தயாரிப்பாளரும் திரைப்பட விமர்சனமான ரவீந்திரன் சந்திரசேகரும் இந்த வீட்டில் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.